இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான 'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இப்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார். 'ரெமோ', 'சுல்தான்' படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ் கனகராஜ் சார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'பென்ஸ்' போன்ற படத்திற்கு இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு நான் ரசிகன். அவரின் யுனிவர்சில் இசையை உருவாக்குவது எனக்கு உண்மையிலேயே பெரிய கனவு. ராகவா லாரன்ஸின் திரைப்படங்களில் சிறந்த பாடல்கள் மற்றும் நடனத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த இசையை வழங்குவதற்கான எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இந்த படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் நன்றி" என்றார்.
சாய் அபயங்கர் சுயாதீனப் படல்களை உருவாக்குவதைத் தாண்டி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தவிர, அவர் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார் & சி. சத்யா போன்ற மிகப் பெரிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான பல படங்களைத் தயாரித்துள்ளது. சாய் அபயங்கரின் இசையுடன் வெளியிடப்பட்ட அற்புதமான 'பென்ஸ்' பட டீசர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...