தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80. சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று (நவம்பர் 09) நள்ளிரவு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடங்களில் மட்டும் இன்றி, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த கணேஷ், டெல்லியைச் சேர்ந்த தக்ஷிண பாரத நாடக சபா என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் ‘டெல்லி’ கணேஷ் என்று அழைக்கப்படார்.
1964 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஎஷ், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படம் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்கச்ளில் நடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
கடந்த 47 ஆண்டுகளாக திரைத்துறையில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்த நடிகர் டெல்லி கணேஷின் இறப்பு அவரது ரசிகர்களையும், திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி கணேஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...