இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படத்தின் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை யார்? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான விடையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் சிறப்பு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அப்பாடல் உலகம் முழுவதும் பிரபலமான பாடலாக தற்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘புஷ்பா 2’-வின் சிறப்பு பாடலில் நடனம் ஆடப்போகும் நடிகை யார்? என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் சிறப்பு பாடலில் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் நடன ராணியாக வர்ணிக்கப்படும் ஸ்ரீலீலாவுடன் இணைந்து அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க தயாராகியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.
விரைவில் படமாக்கப்பட இருக்கும் இந்த சிறப்பு பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைக்க உள்ளார். சமீபத்திய படங்களில் தனது திறமையான நடிப்பு மற்றும் நடனத்தால் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீலீலா 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடனமாட இருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘புஷ்பா 2 : தி ரூல்’ படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...