சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜ மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைக்கும் என்று படம் பார்த்தவர்கள் சொல்வதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு சமீபத்தில் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட இந்திய அளவில் டிக்கெட் முன்பதிவு படு வேகத்தில் நடந்துக் கொண்டிருப்பதால் ‘கங்குவா’ அலை தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதால், பத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக சூர்யா ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருப்பதோடு, படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னது போல், ‘கங்குவா’ படத்தை இரண்டாவது தீபாவளி பண்டிகையாக கொண்டாடவும் தயாராகி வருகிறார்கள்.
மேலும், படத்திற்கான விளம்பர பணிகளை தயாரிப்பு தரப்பு இதுவரை செய்திராத வகையில் மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவை கடந்து துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், ‘கங்குவா’ உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ்த் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...