மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும், என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார்.
புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார்.
படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...