அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.பி.ஷர்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ’மறைமுகம்’. இதில், நாயகனாக டிட்டோ நடிக்க, நாயகிகளாக நிஷித்தா, தனுஷா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி தேவி, கண்ணன், அறிமுக நடிகர் ஜீவகன், உமேரா பேகம், குழந்தை நட்சத்திரம் ஜானவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதைக்களம் 70 வருட தமிழ் திரையுலகம் கண்டிராத புதியதாக இருக்கும், என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.
ஏ.பி.ஷர்வின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வசந்த் இசையமைக்க, வி.ஜீவகன் மற்றும் ஏ.பி.ஷர்வின் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். உமேரா பேகன் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...