முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணமாகும் இரண்டு சுட்டிக்குழந்தைகளின் அழகான இனிமையான பயணத்தைக் காட்டுகிறது. இதயத்தைக் கவரும் அற்புதமான டிராமாவாக இருக்கும் என்ற உணர்வை அளிக்கிறது.
இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த தொடரில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன், இந்த சீரிஸில் நடிப்பதைத் தவிர, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாளுகிறார். இவர்களுடன் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீவருண் எழுதியுள்ள ‘பாராசூட்’ தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, ஆக்ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...