’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி நாயகனாக நடிக்க, நாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்ய விவேக் மற்றும் முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளனர். டி.ஆர்.கே.கிரண் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சாண்டி மற்றும் எம்.ஷெரிப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞான்வேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதோடு, டீசரில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக இருப்பது போலவும் காட்டப்படுகிறது. மேலும், ஒரு இடத்தில் நோட்டு புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் புகைப்படத்தின் மீது நம்பியார் புகைப்படத்தை ஒட்டுவது போன்ற காட்சியும் இடம் பெறுகிறது.
இதன் மூலம், படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக நாயகன் இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம்பியார் போல் வில்லத்தனத்தில் ஈடுபடுவாரா? என்ற கேள்வி எழுந்திருப்பதோடு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் டீசர் கொண்டாட்ட பாணியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...