பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது. படக்குழு குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, பார்வையாளர்களை வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். இதற்காக ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ தலைப்பில் அதன் கடந்தகால உலகத்தை மையமாக கொண்டு புதிய படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டு தேதியை ஹாம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2, 2025 இப்படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தை இயக்கி நடித்திருக்கும், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார். ரிஷப் தனது கதாபாத்திரத்தை உண்மையாக சித்தரிக்க, கேரளாவில் இருந்து தோன்றிய பழமையான தற்காப்பு கலை வடிவங்களில் ஒன்றான களரிபயட்டில் கடுமையான பயிற்சி பெற்றார். கலையில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரது நடிப்புக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்த்து, அவரது பாத்திரத்தை பாரம்பரியமிக்கதாகவும், உண்மையானதாகவும் ஆக்கியுள்ளது.
கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது ’காந்தாரா: பாகம் 1’, அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களை கவரந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதை சொல்லலில் உண்மையாக சித்தரித்த இப்படம், உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து, ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியது.
’காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட உருவாக்கம், ரிஷாப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு மற்றும் முதல் அத்தியாயத்தின் மீதான ஈர்ப்புடன், இந்தப் படம் திரையுலகில் இன்னொரு மைல்கல்லாக மாற உள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...