மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பணி’. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் படம் குறித்து பாராட்டி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், ’பணி’ படத்தின் தமிழாக்கம் நாளை (நவ.22) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘பணி’ தமிழாக்கத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் மற்றும் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ், நாயகி அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
படம் குறித்து பேசிய படத்தின் நாயகனும், இயக்குநருமான ஜோஜு ஜார்ஜ், “என் தமிழ் நன்றாக இருக்காது மன்னிக்கவும், வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என நம்பி வந்திருக்கிறேன். எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊக்குவித்து இங்கு ரிலீஸ் செய்ய சொன்னதால் தான் ரிலீஸ் செய்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப்படத்திற்காக 2 வருடம் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து, இந்தப்படம் செய்தேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். இங்கு மணிரத்னம் சார், கமல் சார், விக்ரம் சார் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள். சந்தோஷ் நாராயணன் எனக்காக ஸ்பெஷல் பாடல் தந்தார். அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இந்தப்படத்தை தமிழில் நாங்கள் பெரிய அளவில், விளம்பரம் செய்யவில்லை. நீங்கள் தான் ஆதரவு தந்து, இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.” என்றார்.
நடிகை அபிநயா பேசுகையில், “இது ஜோஜு ஜார்ஜ் சாரின் முதல் படம். என்னை இந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுத்ததற்கு ஜோஜு சாருக்கு நன்றி. அவரின் பெரிய ஃபேன் நான். இந்தப்படத்தில் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் மிகச்சிறந்த இயக்குரும் கூட. இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசுகையில், “தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்ச்சி. ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் மிகப்பெரும் நடிகர். அவரது இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். தமிழில் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை அபயா ஹிரன்மயா பேசுகையில், “பணி படம் முழுதும் ஜோஜு ஜார்ஜ் தான். இது அவரது படைப்பு. கேரளாவில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இங்கும் நல்ல வரவேற்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஜுனைஸ் பேசுகையில், “பணி என் முதல் படம். இப்படம் கேரளாவில் 5 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் நல்ல வரவேற்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் எனக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
ஜாகர் சூர்யா பேசுகையில், “பணி படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவம். தமிழில் எங்கள் படம் வெளியாவது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
அப்பு பது பப்பு புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் மற்றும் ஏடிஎஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ளார். விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளனர்.
பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள ‘பணி’ தமிழாக்கத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...