தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமாக ’புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் புஷ்பராஜாக இந்தியா முழுக்க ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜூன், சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற ‘புஷ்பா 2 : தி ரூல்’ டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் இந்தியளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு 'புஷ்பா' திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று 'புஷ்பா2' படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம் கொண்டு அந்த இடத்தை அலங்கரித்திருந்தார்கள்.
இந்த நிகழ்வின் ஹலைட்டான தருணம் ‘புஷ்பாராஜ்’ அல்லு அர்ஜூனின் நெகிழ்ச்சியான பேச்சுதான். ‘வணக்கம் தமிழ் மக்கள்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். சென்னையில் தனது சிறுவயது மற்றும் பள்ளிப்பருவ நியாபகங்களை நெகிழ்வுடன் பகிர்ந்தார். கடந்த இருபது வருடங்களாக சென்னையில் தனக்காக ஒரு நிகழ்வு நடத்த வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது எனவும் அது ‘புஷ்பா2’ நிகழ்வில் நிறைவேறி விட்டது எனவும் மகிழ்வுடன் சொன்னார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லு அர்ஜூனிடம் சிறுவயதில் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் செய்து காட்டிய ஸ்டைல் மூவ்மெண்ட் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தை தான் குறிக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்த கொண்ட அல்லு அர்ஜூன், ”கடந்த நான்கு வருடங்களாக ‘புஷ்பா2’ செட் எனது வீடு போல மாறிவிட்டது. மற்ற படங்களுக்காக நான் சென்றாலும் அங்கு ராஷ்மிகாவை மிஸ் செய்த ஆரம்பித்தேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நல்ல நட்பு மலர்ந்திருக்கிறது” என்றார்.
நடிகை ஸ்ரீலீலா குறித்து பாராட்டி பேசும்போது, “அவர் அற்புதமான டான்ஸர். ஒவ்வொரு முறை அவரிடம் நடனத் திறமையை பார்க்கும்போது அவருக்கு இணையாக நானும் எனது நடனத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்” என்றார்.
இயக்குநர் சுகுமார் பற்றியும் அல்லு அர்ஜூன் பகிர்ந்து கொண்டார், “நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரோமோட் செய்யும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது 'ஆர்யா' படத்துடன் வந்தார். 'ஆர்யா' படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது வாழ்க்கையிலும் முன்னேற்றித்திலும் சுகுமார் சாருக்கு பெரிய பங்குண்டு. ரசிகர்கள் நீங்கள் கொடுக்கும் அன்புதான் என் உயிர்நாடி. சீரான இடைவெளியில் தரமான படங்களை உங்களுக்கு வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்”.
மேலும் பேசுகையில், “எங்களின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருமே திரையரங்கில் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கவுள்ளார்கள். நானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்தால் நிச்சயம் ஸ்பெஷல் மேஜிக் எப்போதும் இருக்கும். ‘புஷ்பா2’ படத்தை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்திய தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், கல்பாத்தி அகோரம் சாருக்கும் நன்றி” என்றார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “அல்லு அர்ஜூன் எப்போதுமே சூப்பர் ஸ்பெஷல். அதனால்தான், அவருக்கு இவ்வளவு ரசிகர்கள். ‘புஷ்பா2’ படம் வெளியானதும் அவர் நேஷனல் ஸ்டாரில் இருந்து இண்டர்நேஷனல் ஸ்டார் ஆவார். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரிப்பார்கள்” என்றார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...