தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 48 வது பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உதயநிதின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியதோடு, பாரம்பரிய நெல் வகைகளை தமிழகம் முழுவதும் பரப்பும் பணியை செய்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துணை முதல்வரின் 48 வது பிறந்தநாளையொட்டி 48 பாரம்பரிய விதைகளை, 48 பாத்திகட்டி, 48 விவசாயிகளை பயிரிட செய்து, அதை 48 கிராமங்களுக்கு இலவசமாக கொடுத்து, பாரம்பரிய நெல் ரகங்களை தமிழகம் முழுவதும் துரை சுதாகர் பரப்பியிருக்கிறார்.
1. குதிரைவாலி சம்பா, 2. காட்டுயாணம், 3. தேன்காய் பூசம்பா, 4. பணங்காட்டு குடவாழை நன்மைகள், 5. சொர்ணமசூரி நன்மைகள், 6. ஆற்காடி கிச்சடி நன்மைகள், 7. இலுப்பைபூ சம்பா, 8. கவுணி, 9. ஹப்புகுடஞ்சான், 10. குதிரைவாலி சம்பா, 11. குள்ளகார், 12. முட்டுகார், 13. திரிக்கத்தை, 14. கருங்குறுவை, 15. சேலம் சன்னா, 16. பர்மா கவுனி, 17. குடவாழை, 18. குருவிக்கார், 19. நீலம் சம்பா, 20. லால் குடு, 21. செம்மண் வாரி, 22. மரத்தொண்டி, 23. சிகப்பு ஆணைக்கொம்பன், 24. சென்னி கிருஷ்ணன், 25. மிளகு சம்பா, 26. மிதமுனி, 27. சொர்ணா மயூரி, 28. கருப்பு கவுனி, 29. ஆத்தூர் கிச்சிலி, 30. பட்டை கார், 31. காளான் நமக், 32. கொத்தமல்லி சம்பா, 33. பூங்கார், 34. பூவன் சம்பா, 35. ராமகளி, 36. வைகை வளநாடன், 37. ஆனைக் கொம்பன், 38. செம்பானை, 39. வில்லக்காய் மேனியன், 40. மாப்பிள்ளை சம்பா, 41. பெருமிளகி, 42. சீரக சம்பா, 43. துளசி வாகனை சீரக சம்பா, 44. குறுவை களஞ்சியம், 45. பவானி, 46. தூயமல்லி, 47. சிறுமணி, 48. பிச்ச வாரி ஆகிய 48 நெல்விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் இத்தகைய செயல் திமுக-வினரை திரும்பி பார்க்க வைத்திருப்பதோடு, விவசாயிகளிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
உலக பணக்காரர் எலான் மஸ்க், ‘தப்பாட்டம்’ புகைப்படத்தை பகிர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், திரைத்துறையாக இருந்தாலும் சரி, சமூகப் பணியாக இருந்தாலும் சரி, தனது வித்தியாசமான மற்றும் பிரமாண்டமான செயல்கள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு வருகை தந்த போது, தனது வரவேற்பு மூலம் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது அவரது 48 வது பிறந்தநாளை ஆக்கப்பூர்வமான முறையில் கொண்டாடி அசத்தியிருப்பது தமிழகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...