கோவாவில் நடைபெற்று வரும் 55-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் படக்குழுவை அழைத்து மரியாதை செய்து உயரிய அங்கீகாரத்தை தருகிறது.
அந்த வகையில் தமிழகத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முழு நீள திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, இ.வி. கணேஷ்பாபு இயக்கிய ‘ஆசான்’ குறும்படம் மற்றும் இரண்டு குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
இதுபோல் உலகின் அனைத்து மொழிகளிலும் இருந்தும் படங்களை தேர்ந்தெடுத்து இந்த விழாவில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒடிசா, ஹிமாச்சல் பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய பல்வேறு மாநில நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு இ.வி.கணேஷ்பாபுவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டினரும், இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்களுமாக அரங்கம் நிறைந்த காட்சியாக ‘ஆசான்’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரிப்பில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ளார். மேலும் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில் ஆசான் உருவாகியுள்ளது. இந்திய அரசு நேரடியாக நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
PNB Cinemas proudly presents Dear Krishna, a captivating film written and produced by PN Balaram...
காடுகளின் இறுதி ராஜாவான முஃபாசா: தி லயன் கிங், இப்போது தமிழ்த் திரைப்படத் துறையின் மிகவும் பிரபலமான சில குரல்களுடன் தமிழ் மொழியிலும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்வதற்கான நேரம் இது! 2019ஆம் ஆண்டின் லைவ்-ஆக்ஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் லைவ்-ஆக்சன் முஃபாசா: தி லயன் கிங் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக வந்துள்ளது...
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 48 வது பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உதயநிதின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியதோடு, பாரம்பரிய நெல் வகைகளை தமிழகம் முழுவதும் பரப்பும் பணியை செய்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...