உலகப் புகழ் பெற்ற வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தி லயன் கிங்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் முந்தைய மற்றும் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் ‘முஃபாசா : தி லயன் கிங்’. பாரி ஜென்கின்ஸ் இயக்கியிருக்கும் இப்படம் பல்வேறு மொழிகளில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியாவில் பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘முஃபாசா : தி லயன் கிங்’ படத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் குரல் கொடுத்திருக்கும் நிலையில், தமிழ் பதிப்பின் முஃபாசா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த நடிகர் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு குரல் கொடுட்த்ஹ அசோக் செல்வன், பும்பா மற்றும் டிமோன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி , ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு குரல் கொடுத்த நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் வேடத்திற்கு குரல் கொடுத்த நடிகர் எம். நாசர் ஆகியோர் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள், டிஸ்னி தயாரிப்பில், அதுவும் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட தி லயன் கிங் தொடர்ச்சிக்கு குரல் கொடுத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இது எங்கள் திரை பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறோம், என்று பேசினார்கள்.
நடிகர் நாசர் பேசுகையில், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் இதை பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளது. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெருகூட்டி படமாக்க வேண்டும்.” என்றார்.
நடிகர் சிங்கம்புலி பேசுகையில், “’தி லயன் கிங்’ படத்தில் டப்பிங் வாய்ப்பு எனக்குக் கிடைத்த கிஃப்ட். இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் எனக்கு டீமோன் கதாபாத்திரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த டீமோன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து டிஸ்னி எத்தனை படங்கள் எடுத்தாலும் அதில் நான் தான் பின்னணி குரல் கொடுப்பேன்.” என்றவர், வேறு யாராவது குரல் கொடுத்தால் அவ்வளவு தான், என்று எச்சரிக்கவும் செய்தார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசுகையில், “இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்ததற்கு முக்கிய காரணம் என் அக்கா பிள்ளைகள் தான். அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள், அங்கு அனைவரிடமும் என் மாமா தான் குரல் கொடுத்தார் என்று பெருமையாக சொல்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நிறைய எமோஷன் இருக்கும். அதனால், மற்ற படங்களுக்கு டப் செய்வது போல அல்லாமல், கவனமாக செய்தேன். உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். நானும் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கான வட்டம் முழுமையாகி விட்டதாக நினைக்கிறேன்” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், “இந்த படத்திற்கு நான் குரல் கொடுக்க காரணம் என்னுள் இருக்கும் குழந்தை குணம் தான். இதுபோன்று விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை. இந்த அனுபவம் புதியதாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறதா! என்று நினைத்த போது, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் கஷ்ட்டமாக இருந்ததாக சொன்னார்கள். பிறகு போக போக அதை புரிந்துக் கொண்டு சரியாக செய்துவிட்டோம்.” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி! உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “ரஃபிக்கின் இளைய வெர்ஷனுக்கு நான் குரல் கொடுத்திருக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்!.” என்றார்.
John Abraham, one of Bollywood's most versatile and celebrated actors, has established himself as an icon in the action genre...
இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, “எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம்...
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ...