80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது.
ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் இணைந்து தயாரிக்கும் படம் ‘எல்லாம் நன்மைக்கே’. சமீபத்தில் வெளியான ‘ஒன்வே’ படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகன் வேடத்தில் நடிக்கும் இளம் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முக்கியமான வேடத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடிகை அம்பிகா நடிக்கிறார்.
முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜா பரணிதரபிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். முருகானந்தம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யானி.ஆர் இசையமைக்கிறார். ஜான் பாபு நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ராஜா பரணிதரபிரபு கூறுகையில், “’எல்லாம் நன்மைக்கே’ படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன்.” என்றார்.
கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் முதல் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து பொள்ளாச்சி, வல்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று இறுதியாக சென்னையில் நிறைவடைய உள்ளது.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...