ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெக்ஸ்டர்’. ராஜீவ் கோவிந்த் மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, நடிக்க அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் சூரியன்.ஜி கூறுகையில், “சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனாக பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா? என்று திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் திரில்லருடன் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.” என்றார்.
ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதி, ஸ்ரீனிவாஸ் பி.பாபு படத்தொகுப்பு செய்திருக்கிறார். அஷ்ரப் குருக்கல் மற்றும் கே.டி.வெங்கடேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, சினேகா அசோக் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக ஷார்வாக்.வி.என் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
சிவம் கதை எழுத, திரைக்கதை, வசனம் எழுதி சூரியன்.ஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ‘டெக்ஸ்டர்’ வெளியாக உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...