Latest News :

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்.

 

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். 

 

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா அற்புதமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி- தாடி- நேர்த்தியான உடல் அமைப்பு-  சட்டை இல்லாத தோற்றம் - ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. அவரின் இந்த துணிச்சலான அவதாரத்தில், கடலில் அச்சுறுத்தும் முதலையுடன் அச்சமின்றி போராடுவதையும் சித்தரிக்கிறது. அதே தருணத்தில் கைகள் மற்றும் கயிறு மூலம் அந்த உயிரினத்தின் வாயைத் திறந்து வைத்திருக்கும் ருத்ராவின் துணிச்சல் மற்றும் வலிமையும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. 

 

நாக பந்தம் சாகசம் கலந்த காவிய படமாக உருவாகி வருகிறது. இதன் டேக் லைன் 'தி சீக்ரெட் ட்ரெஷர் '. இது பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் பயணத்தை குறிப்பதாக இருக்கிறது.  இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அபிஷேக் நாமா எழுதி இருக்கிறார். இதனை NIK  ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபு ரெட்டி , அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் இணைந்து பெருமையுடன் வழங்குகிறார்கள்.

 

நாக பந்தம் என்பது ஆன்மீக மாயவாதத்தையும்,  சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைக்கும் ஒரு இந்திய காவியமாகும். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

 

இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த திரைப்படம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக நாக பந்தத்தின் புனித நடைமுறையை மையமாகக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாத் போன்ற ஆலயங்களில் சமீபத்திய புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தெய்வீக இடங்களை சுற்றியுள்ள வசீகரிக்கும் வகையிலான புராணங்களின் அடிப்படையிலும் .. அவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிரான சடங்குகளையும் பிரதிபலிக்கிறது. இந்த திரைப்படம் ஒரு பழமையான மர்மங்களை புதிய நவீன கதையம்சத்துடன் உயிர்ப்பிக்கிறது. 

 

எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத, ஆர். சி. பனவ் படத்தொகுப்பு பணிகளை கையாள்கிறார். அசோக் குமார் கலை இயக்குநராக பங்களிப்பு செய்கிறார். 

 

நாக பந்தம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும். 

Related News

10282

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery