Latest News :

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் பலூன் பிக்சர்ஸ் சார்பில் அருண்பாலாஜி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சஞ்சனா, ஜான் விஜய், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

 

வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘பாட்டல் ராதா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

விழாவில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல அவசியமானதொரு படம். இந்தப்படம் பெரும் வெற்றியடையும்.” என்றார்.

 

இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன், அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். ’பாட்டல் ராதா’-வை பார்த்த பிறகு இனி அந்த படம் செய்தால் ’பாட்டல் ராதா’ பார்த்து எடுத்ததை போல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது ’பாட்டல் ராதா’ படத்தை விட சிறப்பாக எடுக்க முடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்த படம்.” என்றார்.

 

இயக்குநர் மிஸ்கின் பேசுகையில், “’பாட்டல் ராதா’ திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது. முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன் குறிப்பாக குரு சோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள்.” என்றார்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “’பாட்டல் ராதா’ திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும்  அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.” என்றார்.

 

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “குடியால் பல குடும்பங்கள் அழிந்து போனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும், நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார்.  தொடர்ந்து இந்த தமிழ் சினிமாவில்  அவசியமான படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம்.  இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக் கருத்துள்ள படங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருப்போம். ‘பாட்டல் ராதா’ உங்களை ரசிக்க வைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக் இருக்கும்.” என்றார்.

Related News

10290

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery