Latest News :

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’. இதில் கதாநாயகியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. 

 

வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் பி.வாசு கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பி.வாசு பேசுகையில், “அருண் என் உதவியாளர், அவர் படம் செய்கிறேன் என்றவுடன் யார் புரோடியூசர் எனது கேட்டேன், தேனாண்டாள் பிலிம்ஸ் என்றார். அந்தக் கம்பெனியில் படம் செய்வது பெரிய விசயம், இதுவே பெரிய வெற்றி என்றேன். தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் மிகப்பெரிய ஆளுமை, அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ரஜினி, விஜயகாந்த் எல்லாம் அவரைப்பற்றி அவ்வளவு சொல்வார்கள். அவரின் மகன் தான் முரளி. அப்படிப்பட்ட கம்பெனியில் அருண் படம் செய்வது மகிழ்ச்சி. நான் பாடல்கள் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது, இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல வருடம் கழித்து வந்த மதகஜராஜா ஜெயித்துள்ளது. நடிகர் விஜய் என்னுடைய நடிகன் படம் நடிக்க ஆசைப்பட்டார். அது மிகச்சிறந்த கமர்ஷியல் படம். ஆனால் கவுண்டமணி, மனோரமா இல்லாமல் இப்போது அந்தப்படத்தை எடுக்க முடியாது. இந்தப்படத்திற்கு வருவோம். லாஸ்லியா தமிழ் பேசும் நடிகை, அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துகள். ரயானிடம் நல்ல திறமை உள்ளது. ஹரி பாஸ்கருக்கு வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் நிதின் பேசுகையில், “ஒரு அருமையான படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இங்குள்ள இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எதிர்கால ஏ ஆர் ரஹ்மான், ரஜினி, நயன்தாரா எல்லோரும் உள்ளனர். எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. படம் பார்த்து,  அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார். 

 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசுகையில், “இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி,  இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆரவத்துடன் இருப்பார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண், மிக நன்றாகப் படத்தை   உருவாக்கியுள்ளார். நிதின் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். படம்  நன்றாக வந்துள்ளது,  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் சித்ரா லட்சுமணன் பேசுகையில், “இந்தப் படக்குழுவினர் மிகத் திறமையானவர்கள். இரண்டு நாட்கள் முன் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய காலகட்டத்தில், சின்னத்திரை, பிக்பாஸ், யூடியூப் மூலம் பல கலைஞர்கள் வந்து அசத்துகிறார்கள். இந்த இளைஞர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. நண்பர் இளவரசு இந்த படக்குழுவினர் மிகச்சிறப்பாக உழைத்துள்ளதாக என்னிடம் கூறினார். அவர் ஒரு சிறந்த விமர்சகர். படக்குழுவினர் மிகத் தெளிவுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு என் வாழ்த்துகள்.  இந்த காலத்திற்கு ஏற்ற ஒரு படத்தைத் தந்துள்ளார். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்.” என்றார்.

 

பிக்பாஸ் புகழ் ரயான் பேசுகையில், “இந்த வாய்ப்பை எனக்கு அளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அருண் நிறையச் சொல்லித் தந்தார். என் கதாபாத்திரத்தை மெருகேற்ற நிறைய உழைத்திருக்கிறேன். இப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். லாஸ்லியா உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரும் பிக்பாஸில் இருந்து வந்தவர். நிறைய அதைப்பற்றிப் பேசினோம். ஷூட் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் சாரா பேசுகையில், “என் அப்பா நான் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்கிறேன் என்றவுடன் மிகவும் சந்தோசப்பட்டார் அவருக்குப் பிடித்த நிறுவனம் இது. இயக்குநர் அருண் ஹீரோவாக நடிக்கத் தகுதியானவர், நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் பிடித்தவர். நல்ல ரைட்டர். ஹரிபாஸ்கருடன் நடித்தது மிக ஜாலியாக இருந்தது. சமீபத்தில் மிகவும் ரசித்து நடித்த படம் இது தான். லாஸ்லியாவுடன் எனக்குக் காட்சிகள் இல்லை, மிக நன்றாக நடித்துள்ளார். படம் எல்லோருக்கும் பிடிக்கும். 2 மணி நேரம் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர் இளவரசு பேசுகையில், “தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படம் முடித்து, 101வது படமாக இதனை தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 100 ஐ கடப்பது அத்தனை சாதாரண விசயமல்ல. இந்தக் கம்பெனியில் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. ராமநாரயணன் சார் மிகப்பெரிய தயாரிப்பாளராகப் புகழ் பெற்றவர். விஜயகாந்த்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். அப்படியான கம்பெனியில் பி வாசு பள்ளியிலிருந்து வந்த அருண்  இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் எனக்கு அப்பா பாத்திரம் எனச் சொன்னபோது, எனக்கு எல்லாம் அப்பாவாகத்தான் வருகிறது. இதைச்செய்ய வேண்டுமா? எனத் தயங்கினேன். ஆனால் அருண் கதையையே ஷாட் ஆர்டராகத் தான் சொன்னார். அவரிடம் இருந்த தெளிவு எனக்கு பிடித்திருந்தது. இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார். வாசு சார் அந்த வகையில் ஜாம்பவான். அவரிடமிருந்த திறமை இந்த தலைமுறைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் ஹரிபாஸ்கர் நாயகன் அவர் ஒரு யூடுபர் ஆனால், படத்தில் நடிக்க கேமராவை அணுகி நடிப்பதில், திறமை வேண்டும். முதல் நாளிலேயே ஹரிபாஸ்கர் வெகு இயல்பாக நடித்தார். களவாணியில் விமலிடம் நான் பார்த்த திறமையை ஹரிபாஸ்கரிடம் பார்த்தேன் அவருக்கு வாழ்த்துகள். தமிழ் பேசத்தெரிந்த மேற்கத்திய அழகி லாஸ்லியா. நல்ல கதாப்பாத்திரம் நன்றாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள்.  இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் ரொம்ப சின்னப்பையன் அருமையான பாடல்கள் தந்துள்ளார். கேமராமேன் மிக அருமையாகச் செய்துள்ளார். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய திருப்பத்தைத் தர வேண்டும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்  பேசுகையில், “எனக்கு இந்தப்படத்தில் 6 பாடல்கள். பாட்டே இல்லாமல் படம் வரும் காலத்தில், எனக்கு இந்தப்பட வாய்ப்பை தந்து, என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருண் மிகச் சுறுசுறுப்பானவர். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. லாஸ்லியா என் முதல் ஆல்பத்தில் நடித்திருந்தார் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கேட்ட அனைத்தையும் தந்து, முழு ஆதரவு தந்த நிதின் சார், முரளி சாருக்கு நன்றி. ஹரி பாஸ்கர் யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல, அவர் இந்த இடத்திற்கு வர நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். அவர் இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவர் என் நண்பர். படம் செய்ய வேண்டுமென்பது எங்கள் கனவு. அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பேசுகையில், “இது என் முதல் மேடை, 12 வது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்த கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி.  வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். முரளி சாரிடம் இந்தக்கதை சொன்ன போது அவர் ரியாக்ட் செய்யவே இல்லை சைலண்டாகவே இருந்தார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் இந்தப்படத்தை நாம் செய்யலாம் என்றார். இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. நிதின் சாரை முதன் முதலில் வீடியோ காலில் தான் பார்த்தேன்.  கதை அவருக்கும் பிடித்திருந்தது. இந்தப்படம் செய்ய எனக்கு சப்போர்ட் தேவைப்பட்டது.  சுகுமார் அண்ணாவிடம் கேட்டேன் அவர் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார்.  லாஸ்லியா இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவருடன் வேலை பார்த்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தின் ரீரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் படம் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.” என்றார்.

 

நடிகை லாஸ்லியா பேசுகையில், “இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. இப்படி ஒரு கதாப்பாத்திரம் தந்த அருணுக்கு நன்றி. ஒஷா 6 நல்ல பாடல்கள் தந்துள்ளார். அவரை வாழ்த்துங்கள். ரயான் பிக்பாஸ் முடிந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் நிறையப் படங்கள் கிடைக்க வாழ்த்துகள். இளவரசு சார், சாரா போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. ஹரியும் இயக்குநரும் பயங்கர குளோஸ், என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஹரிக்கு  நல்ல எதிர்காலம் இருக்கிறது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார். 

 

நடிகர் ஹரிபாஸ்கர் பேசுகையில், “இந்த திரைப்படம் மிக அற்புதமான பயணம், எங்கிருந்து ஆரம்பித்தது என்று நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. கனவு பலித்த தருணமாக உள்ளது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது. என்னை அறிமுகப்படுத்தும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சாருக்கு வாழ்த்துகள். முரளி சார் அறிமுகமானதிலிருந்து, 1 வருடமாக தொடர்ந்து ஃபாலோ செய்தேன். அருணும் நானும் நண்பர்கள், அவர் சொன்ன லைனை முரளி சாரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. நிதின் சாரும் எங்களுடன் இணைந்து பயணித்தார். அவர் டெக்னிகலாக எல்லாவற்றையும் பிரித்து அலசி விடுவார். அவரிடம் அடுத்துச் சிக்கும் இயக்குநர் தான் பாவம். எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்போடு இப்படத்தை எடுத்துள்ளோம். லாஸ்லியா ஃபர்ஸ்ட் இரண்டு நாள் அமைதியாக இருந்தார் ஆனால் இரண்டாவது நாளிலிருந்து செம்ம கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார். மிக அருமையாக நடித்துள்ளார். சாரா அண்ணன் யூடுப்பில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் கலக்குகிறார். அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இளவரசு ஒரு லெஜெண்ட், அவர் எங்களுக்கு காட்ஃபாதர் மாதிரி, அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அருண் என் நண்பர் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அணுகுவார், சுகுமார் அண்ணன், இப்படத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டது அவர் தான். அவருக்கு நன்றி. கேமரா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒஷா அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படத்தில் உழைத்த அத்தனை பேரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார். 

Related News

10291

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

Recent Gallery