Latest News :

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் முதல் தனிப்பாடல் வெளியானது!
Thursday February-13 2025

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட்ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ' ஆஸம் கிஸா..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் கெலி தீ மற்றும் கானா ஃபிரான்ஸிஸ் ஆகியோர் எழுத,  இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டீசர் , ட்ரெய்லர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

யுவன் சங்கர் ராஜா - ஸ்வினீத் எஸ். சுகுமார்- ஆஃப்ரோ கூட்டணி திரையிசை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் வைப்( Vibe)பான பாடலாக ..' ஆஸம் கிஸா..' உருவாகி இருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Related News

10320

’2K லவ் ஸ்டோரி’ நாயகன் ஜெகவீர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் - இயக்குநர் சுசீந்திரன்
Tuesday February-18 2025

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஜெகவீர் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடித்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’2K லவ் ஸ்டோரி’...

கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர் வலியுறுத்தல்
Tuesday February-18 2025

அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில், எஸ்...

’டெக்ஸ்டர்’ அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் - கே.ராஜன் நம்பிக்கை
Tuesday February-18 2025

ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ்...

Recent Gallery