பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ’ஹரி ஹர வீர மல்லு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பு.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ராகுல் சிப்லிகுஞ்ச், ரம்யா பிஹாரா, யாமினி கந்தசாலா, ஐரா உடுபி, மோகனபோகராஜு, வைஷ்ணவி கண்ணன், சுதீப் குமார் மற்றும் அருணா மேரி ஆகியோர் குரல்கள்,சந்திரபோஸ், அப்பாஸ் டைர்வாலா, பி.ஏ. விஜய், வரதராஜ் சிக்கபள்ளாபுரா மற்றும் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆழமான வரிகள் இந்தப் பாடலை மேலும் சிறப்பாக்குகின்றன.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு ' திரைப்படம் 2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...