Latest News :

சிலம்பரசன் பாடிய ‘டீசல்’ படத்தின் 2வது தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் சிங்கிளான 'பீர் சாங்' தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் மற்றும் சர்வதேச ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இந்த பாடல் சமூக ஊடக தளங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. இப்போது, 'டீசல்' படக்குழு  அடுத்தப் பாடலான 'தில்லுபரு ஆஜா' மூலம் ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

நடிகர் சிலம்பரசன் டிஆர் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் எனர்ஜிடிக்  இசையமைப்பில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஹரிஷ் கல்யாணின் எனர்ஜிடிக் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஸ்வேதா மோகனின் ஈர்க்கும் குரல் நடிகை அதுல்யா ரவியின் திரை இருப்புக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் குழந்தைகள் மற்றும் கோரஸ் பாடகர்களின் குரல் அமைந்துள்ளது.

 

ஒவ்வொரு பாடலிலும் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தி வரும் ஷோபி மாஸ்டர், இந்தப் பாடலிலும் சிறந்த நடனத்தைக் கொடுத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான இந்த இரண்டு பாடல்களுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கிய 'டீசல்’ படம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்.எஸ் பிரபு மற்றும் ரிச்சர்ட் எம் நாதன் ஆகியோர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியும் செய்திருக்கின்றனர். புரொடக்‌ஷன் பை எஸ்பி சினிமாஸ்.

Related News

10339

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!
Monday February-24 2025

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...

’டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின்’ முதல் தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...

உலக பார்வையாளர்களுக்காக ஆங்கிலத்தில் உருவாகும் ’டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’
Monday February-24 2025

யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்...

Recent Gallery