காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முக்கியமான சில இயக்குநர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள், “ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது” என்று அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் விரைவில் மிகப்பெரிய ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த நடிகர் அப்புக்குட்டி, “தற்போதைய காலக்கட்டத்தில் திரையரங்குகளில் ஒரு நல்ல படத்திற்கு ரசிகர்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. எனவே, என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள் திரைப்படமும் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.
இப்படத்தை தொடர்ந்து ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், காமெடி, குணச்சித்திரம் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடிப்பதோடு, சினிமாவில் நடிகனாக தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதே தனது விருப்பம், என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அப்புக்குட்டி நண்பர்கள் நற்பணி மன்றம்’ தொடங்கி பல்வேறு நற்பணிகளை செய்து வரும் அப்புக்குட்டி, தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடிப்பதை தனது லட்சியப் பயணமாக கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது...