விமல் நாயகனாக நடிக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ திரைப்படம் ஆக்ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
விமலுடன், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணமாகும்.
வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்தி வாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராமு செல்லப்பா மற்றும் குமரவேல் திரைக்கதை எழுதியுள்ளனர். ராமு செல்லப்பா வசனம் எழுதியிருக்கிறார். மணி அமுதவன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...