Latest News :

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மூன்றாவது முறையாக ‘திரெளபதி 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியை கொண்டதாகும். 

 

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி கூறுகையில், “படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மும்பை, ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இதற்கு முன்பு எங்கும் பார்த்திராத இடங்களில் மொத்த படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த வருட முடிவுக்குள் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்.’ என்றார்.

 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். 

 

படத்தில் நடிக்க கூடிய மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படம் குறித்தான மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

10355

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

கவனம் ஈர்க்கும் ஆகாஷ் ஜெகன்நாத்தின் ‘தல்வார்’ வீடியோ கிளிம்ப்ஸ்!
Sunday March-02 2025

பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்...

Recent Gallery