Latest News :

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, அற்புதமான காமெடி, பழைய நினைவுகள்,  ஞாபகங்கள் மற்றும் குடும்ப உறவுகளை கொண்டாடும் அருமையான கதை ஆகியவற்றிற்காக பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்கள் பெற்றது.

 

இந்தத் திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை  அழுத்தமான காமெடியுடன்  பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. ஒய்.டி.ராஜா என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதி, பாக்யலக்ஷ்மி (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக மீனாட்சி (மீனாட்சி சௌத்திரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறான், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி,  அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும்  சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான என்டர்டெயினராக இப்படம் உருவாகியிருந்தது. 

 

’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி கூறுகையில்.., “இந்தப் படத்தை ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி, அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது, மிகுந்த உற்சாகம் தருகிறது. இந்த படம் ஒரு முழுமையான காமெடி ரோலர்கோஸ்டர் அனுபவத்தை வழங்கும்.  மிகச் சிறந்த நடிகர்களின் நடிப்பில் இது அருமையான என்டர்டெயினராக இருக்கும்.  திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடப்பட்டதைப் போலவே, இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.” என்றார்.

 

வெங்கடேஷ் டகுபதி கூறுகையில்.., “இந்தப் படத்தில் ‘ராஜு’ பாத்திரத்தை செய்தது மிக அற்புதமான  அனுபவமாக இருந்தது.  குடும்ப சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் நாயகனின் கதை, காதல், காமெடி என பரபரவென பல திருப்பங்களை கொண்டிருந்ததது.  இந்த கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்தது மிக இனிமையான அனுபவம்.  ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி வெளியீட்டின் மூலம், அனைத்து மக்களும் இப்படத்தை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகயில், “‘பாக்யலக்ஷ்மி’ எனும் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் ஆர்வமுள்ள, இனிமையான ஒரு குடும்பப்பெண். அவளது இன்னொசென்ஸையும்,  பொஸஸிவ்னெஸையும்  திரையில் கொண்டு வந்தது மிக அற்புதமான அனுபவம்.  குறிப்பாக வெங்கடேஷ் சார் போன்ற ஆளுமையுடன்  இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நடிகர்களின் கெமிஸ்ட்ரி ஒவ்வொரு காட்சியிலும் பெரும் சிரிப்பை வர வைத்தது.  இத்திரைப்படம் திரையரங்குகளில்  ரசிகர்களிடமிருந்து பெரும்  பாராட்டுக்களை குவித்தது.  இந்த படத்தை தொலைக்காட்சி மற்றும் ஓடிடி மூலம் அனைத்து ரசிகர்களும்  ரசிக்கவுள்ளது பெரும் உற்சாகத்தை தருகிறது.  இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், அழைக்க வைக்கும், மற்றும் படம் முடியும் வரை உங்களை அசைய விடமால் உற்சாகப்படுத்தும்.’ என்றார்.

 

மீனாட்சி சௌத்திரி கூறுகயில், “‘மீனாட்சி’ என்பது பல பரபரப்பான மாற்றங்களை கொண்ட ஒரு வலிமையான, ஆளுமைமிக்க  கதாபாத்திரமாகும். அவள், ராஜு மற்றும் பாக்யலக்ஷ்மி  ஆகியோருக்கு இடையே உள்ள காட்சிகள்,  இந்த படத்தில்  நகைச்சுவை மிகுந்த மற்றும் எதிர்பாராத தருணங்களை உருவாக்குகின்றன. தியேட்டர்  வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த  வரவேற்பு, அவர்கள் கதாபாத்திரங்களை எந்தளவு ரசித்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தப் படம் நகைச்சுவையுடன், மனதை இலகுவாக்கும் ஒரு அற்புதமான படமாகும்.’ என்றார்.

Related News

10357

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery