Latest News :

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் T சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், எடிட்டர் -ஆல்வின் டாமி,பாடல்கள் -  ரஃபீக் அஹமத்,விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா, பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா, ஸ்மிதா. தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளார் ஜாலி டேவிசன் சி.ஜே. நடனம் -ஷெரிப் மாஸ்டர், ஷிபு , சண்டைப் பயிற்சி - டேஞ்சர் மணி, கலை - ராஜு கோவிலகம்,வெளியீடு எஸ் எப் சி ஆட்ஸ்.

 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநர் பேரரசு பேசுகையில், “இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம் கேட்கிறபோதும் ரசிக்கிறபோதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது .ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும் .நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா?இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஹோட்டல்களில் , நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக  காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம். இங்கே அருமையாக நிஜாம் பாடினார் .அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள்.

 

இந்தப் படத்தின் கதாநாயகி சந்தியாவாம். தமிழ்நாட்டுக்கு  சந்தியாக்கள் மூன்று தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அம்மா ஒரு சந்தியா, காதல் படத்து சந்தியா ஒன்று, இப்போது மூன்றாவதாக இந்த சந்தியா வந்ந்திருக்கிறார். இன்று நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டைகளாகி வருகிறார்கள். நம்மிடம் ரத்தம் இருக்கும் வரை அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சுதற்கு இருக்கும். இதில் மூன்று பாடல்களுமே நன்றாக உள்ளன.இது மாதிரியான  பாடல் வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. இப்போது வந்துள்ளது. அந்தாதி ரகத்தில் ஒரு பாடல் வந்துள்ளது .எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள். இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள்.கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள் .ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது.

 

தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 250 படங்களுக்கு மேல் நடித்தவர். பெரிய புகழ் பெற்றவர். தாத்தா 250 படங்களில் நடித்து சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தை எடுத்ததில் இழந்திருக்கிறார். அந்த வீடு ஜப்தி நடவடிக்கைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என்றால் நினைத்துப் பாருங்கள். ஒரு படம் எடுத்தால் ஒட்டுமொத்த சொத்தும் போய்விடுமா ? இது சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அல்ல. தமிழ் திரை உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஆபத்தில் இருக்கிறது சினிமா . இந்தச் செய்தியைப் பார்த்தால் யார் படம் எடுக்க வருவார்கள்? அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும்.நான் ஒரு செய்தியைப்படித்தேன்.பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. முன்பணம் எதுவும் வாங்குவதில்லை .கதை பிடித்திருந்தால் நடிப்பார்.அந்தப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை, லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுகிறார் என்று படித்தேன்.என்ன ஒரு அருமையான திட்டம்! எப்படிப்பட்ட மனம் அவருக்கு! அந்த அளவுக்கு அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமாவும் அவரைக் கைவிடாது. இப்படிப்பட்ட நிலை இங்கு வருமா? இந்த புதிய படக் குழுவினரின் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளரும் நடிகருமான அனூப்ரத்னா பேசுகையில், “தமிழில் இது எனக்கு முதல் மேடை. இங்கே வருகை புரிந்துள்ள கே ராஜன் சார், பேரரசு சார் அவர்களுக்கு நன்றி.இந்த எங்களின் புதிய முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும். நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமா தான் எனது இலக்காக இருந்தது. நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என முடிவு செய்தேன்.அதன் மூலம் புதிய புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு,கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்துதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். முதலில் எந்த மாதிரியான படம் எடுப்பது என்று யோசித்தோம். பிறகு ஒரு ஆக்சன் த்ரில்லர் வகையிலான படம் எடுப்பதற்கு முடிவு செய்தோம். நமக்கு ஜாக்கிசானைத் தெரியும் ஜெட் லீ, சில்வஸ்டர் ஸ்டாலோன் எல்லாரையும் தெரியும் .காரணம் அவர்கள் அனைவரும் ஆக்ஷன் ஹீரோஸ் என்று புகழ் பெற்றவர்கள்.நம்மூரில் ரஜினி சார், சிரஞ்சீவி சார் அனைவரையும் தெரியும்.அவர்களும் ஆக்ஷன் ஹீரோவாகப் புகழ் பெற்றவர்கள் .

 

லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது. அதை நாம் கவனிக்காமல் விட்டால் அது கடித்து ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.நம்மைச் சுற்றி  இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கூடவே இருப்பார்கள்.  ஒருவனுக்கு அருகே இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் யார் நல்லவர்? யார் கெட்டவர் ? என்று பார்த்தால் தெரியாது, ஆனால் ரத்தத்தை உறிஞ்சக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுதான் கதையின் அடிப்படையான ஆதார வரியாக இருக்கும்.தங்களின் புதிய முயற்சிக்கு  ஆதரவு தர வேண்டுகிறேன்.’ என்றார்.

 

சண்டை இயக்குநர் டேஞ்சர் மணி பேசுகையில், “ஒரு படத்தில் ஆண்களுடன் ஆண்கள் சண்டை போடுவதாக எடுப்பதாக இருந்தால் சுலபம். பெண்களுடன் பெண்கள் சண்டை போடுவதும் அப்படித்தான் .ஆனால் இதில் ஆண்களும் பெண்களும் சண்டை போடுவது போல காட்சிகள் உண்டு.அதனால் சிரமப்பட்டு எடுத்தோம்.எனக்கு மலையாளம் தெரியாத போதும் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை முடித்தோம். படக் குழுவினர் அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.” என்றார்.

 

விநியோகஸ்தர் ஷிஜின்லால் பேசுகையில், “இதை முதலில் மலையாளத்தில் மட்டும் எடுப்பதாக இருந்தது.நான் தான் சொன்னேன் இதைத் தமிழில் தெலுங்கிலும் கொண்டு வரலாம் என்று. ஏனென்றால் இங்கே உள்ள ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்திருக்கும் பெரும் நடிகர்களை மட்டும் பார்ப்பதில்லை. படம் எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் பிறகு பணிகளில் இறங்கியபோது தமிழ் மொழிக்கும் ஏற்றதாக இருந்தது. கேரளாவில் கதை மட்டும் முக்கியமாகப் பார்ப்பார்கள்.அதை முன்னிட்டுச்  சிக்கனமாக எடுப்பார்கள். ஆனால் இது எல்லோருக்கும் ஏற்ற மாதிரி ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும்.படம் நன்றாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் கூறினேன்.நம்பி வாங்க என்று கூறினேன்.அனூப் மலையாளத்தில் சுமார் 20 படங்களில்  சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் இதில் அவர் நடிப்பதாக இல்லை.ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நடிகராக மட்டும் இருந்தார்.அவருக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் பிறகு தான் இதில் வந்தார். இதில் நன்றாக நடித்துள்ளார்.படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசுகையில், “இந்தப் படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள்.இந்த விழாவில் கேரளாவில் இருந்து வந்திருந்த அவர்கள் தமிழ் பேசிய அழகே தனி.நான் இப்போது சொல்கிறேன் நீங்கள் பேசிய தமிழ் அழகு. கதாநாயகி கூட அழகாகத் தமிழ் பேசினார். கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள்.தமிழையும் தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது. தமிழர்கள், தான் கெட்டுப் போவார்கள் தவிர அடுத்தவர்களைக் கெடுக்க மாட்டார்கள்.வாழ வைப்பார்கள்.

 படத்தின் பெயர் லீச் என்று உள்ளது. அப்படி என்றால் ரத்தம் உறிஞ்சும் அட்டை என்று பெயர். இன்று சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கோடீஸ்வரர்கள் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக உயர்ந்து கொண்டே போகிறான். உலகத்தில் மூன்றாவது பணக்காரர் யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். திட்டமிட்டு ஒரு குடும்பத்தையே பணக்காரர் ஆக்கி கொண்டு வருகிறார்கள். ஏழைகள் எண்பது கோடி பேருக்கு 5 கிலோ அரிசி இனாம் என்கிறார்கள். ஏன் இனமாக,இலவசமாகப் போடுகிறீர்கள்? சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலமாகியும் ஏன் இலவசம் தரவேண்டும்? வேலைவாய்ப்பு இல்லை. அது இல்லாமல் சிரமப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டுமே தவிர இலவசம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் ஏழைகளாக இருப்பது, இந்தியாவில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நாம் வாழ்வோம் அடுத்தவர்களை வாழ வைப்போம்.

 

ஆன்மா மூன்று வகைப்படும். ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகாத்மா என்றும் மூன்று வகைப்படும். .ஆத்மா நமக்குள்ளே இருக்கிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்துப் பிழைத்து ஆத்மாவைக் காப்பாற்றுகிற வகை.இது சாதாரண ரகம். நாம் நன்றாக இருக்க வேண்டும் நாம் சம்பாதித்து மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் வகை அவன் புண்ணிய ஆத்மா. தன்னைப் பற்றி எந்தக் கவலையும்  இல்லாமல் பிறர் வாழ வேண்டும் என்று மட்டும் நினைப்பவன் மகாத்மா .அப்படிப்பட்ட மகாத்மாக்கள் நாட்டில் சிலர்தான் உண்டு. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது; வெந்து கொண்டிருக்கிறது.இன்று சின்ன கம்பெனிகள் மட்டுமல்ல பெரிய கம்பெனிகளும் சிரமத்தில் இருக்கிறார்கள்.இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி உயர்த்தி  சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்குச் செய்துவிட்டார்கள்.

 

 எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? தமிழ்த் திரையின் தலை மகன் தமிழ் சினிமாவின் அடையாளம் உலக நடிகர்களுக்கெல்லாம் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.நாடகங்களில் நடித்து திரைப்படங்களில்  புகழ்பெற்று உலக நடிகனாக உயர்ந்து காட்டிய அவர் அண்ணாவால் தென்னாட்டு மார்லன் பிராண்டா என்று பாராட்டப்பட்டவர்.நடிப்பால் உலகத்தையே கவர்ந்த அந்த சிவாஜி கணேசனின் வீடு இன்று ஏலம் போவதற்கு தயாராகி விட்டது.ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது. செய்தியைப் படித்த போது வருத்தமாக வேதனையாக இருந்தது, மூன்று கோடி கடன் வாங்கி பேரப்பிள்ளை படம் எடுத்ததில் வட்டி ஏறி 9 கோடி ஆகி உள்ளது. இன்று ஏலம் விடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது. முடிந்தவர்கள் உதவி செய்யலாம். பெரிய நடிகர்கள் பத்து பேர் சேர்ந்தால் இதைத் தீர்க்க முடியும்.

 

சிவாஜியால் கலைஞரா? கலைஞரால் சிவாஜியா? என்கிற அளவுக்கு ஒருவரால் ஒருவர் புகழ் பெற்றனர். சிவாஜிக்கு நெருக்கமானவர்  கலைஞர்.அந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் ஏதாவது செய்யலாம். தமிழக அரசு இதில் ஏதாவது செய்யலாம். தமிழக கதாநாயகர்கள் உதவி செய்யலாம்.அல்லது நடிகர் சங்கம் உதவி செய்து அந்த சிவாஜியின் வீட்டைக் காப்பாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை வேண்டுகோளாக வைக்கிறேன்.

 

இந்த லீச் பெரிய வெற்றி பெற்று மக்கள் மனதில் சென்று சேர வேண்டும்.பெரிய படங்கள் தான் ஓடும் என்ற நிலை இல்லை. சின்ன படங்கள் சென்ற ஆண்டு வெளியானதில் 10 -12 படங்கள் வெற்றி பெற்றன.

இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

முன்னதாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஜாம் பல குரல்களில் பேசி, திரைப்படப் பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

Related News

10362

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery