‘கே.ஜி.எப்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் படத்திற்கு ‘டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் வெங்கட் கே.னாராயணா மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக உருவானாலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...