தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 1) முதல் பெப்ஸி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
பெப்ஸி தொழிலாளர்களுடன் மட்டும் இன்றி, அச்சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத நபர்களுடம் தாங்கள் பணியாற்றுவோம், என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து பெப்ஸி அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால், ரஜினிகாந்தின் ‘காலா’, விஜயின் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வேலை நிறுத்தம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், பெப்ஸி உறுப்பினர்கள் எப்படி அனைத்து தரப்பினருடன் வேலை செய்கிறார்களோ, அதுபோல தயாரிப்பாளர்களும் தங்களுக்கு ஒத்துவரக்கூடியவர்களுடன் வேலை செய்வார்கள். அந்த அதிகாரம் எங்களுக்கு வேண்டும். நாங்கள் யாருடனும் வேலை செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை, அனைவருடம் வேலை செய்யும் எங்களது உரிமையை தான் கேற்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...