Latest News :

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Tuesday April-01 2025

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘பிளாக்மெயில்’. ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டனர்.

 

இதில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜொடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், லிங்கா, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஜே.எஸ்.ராம் கலை இயக்குநராக பணியாற்ற, ஆர்.திலகப்ப்ரியா சண்முகம் மற்றும் வினோத் சுந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், ராஜ்சேகர் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். 

Related News

10401

மக்கள் கொண்டாடும் ‘உயிர் மூச்சு’! - திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழு தவிப்பு
Thursday April-03 2025

சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பழகிப்போன ஒன்று தான் என்றாலும், சமூக அக்கறையோடு, நல்ல திரைப்படமாக உருவாகி மக்களால் கொண்டாப்படும் திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்காமல் தவிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும்...

’கராத்தே கிட் : லெஜென்ட்ஸ்’ டிரைலர் வெளியானது!
Wednesday April-02 2025

நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் திரும்பியுள்ளது – கராத்தே கிட்: லெஜென்ட்ஸ்...

’சர்தார் 2’ படத்திற்கான செலவுகள் குறித்து கேட்டு அதிர்ந்து விட்டேன் - நடிகர் கார்த்தி
Tuesday April-01 2025

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன்  இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது...

Recent Gallery