ரசிகர்களால் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரஷாந்த், இளம் வயதிலேயே தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் அனைவரது படங்களிலும் நடித்த ஒரே ஹீரோ என்ற பெருமை கொண்டவர். தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், பிரஷாந்த் நடிப்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான ‘அந்தகன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது தனது புதிய படத்தை பிரஷாந்த் அறிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 6) பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் பிரஷாந்த், தனது புதிய படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இப்படத்தை மாஸ் கமர்ஷியல் இயக்குநர் ஹரி இயக்குகிறார். பிரஷாந்த் நடிப்பில் வெளியான ‘தமிழ்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குநர் ஹரி, 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் பிரஷாந்துடன் கைகோர்த்துள்ளார்.
100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘தமிழ்’ படத்தை தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் - இயக்குநர் ஹரி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, இதன் அறிவிப்பே தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரஷாந்தின் 55 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாவதோடு, முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.
ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார்...
‘எம்புரான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘நோபடி’ (NOBODY) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்...