‘எம்புரான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘நோபடி’ (NOBODY) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை அப்துல் எழுத, நிசாம் பஷீர் இயக்குகிறார்.
பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் இ4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி.சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் பூஜையுடன் தொடங்கியது.
‘அனிமல்’ பட புகழ் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் மற்ற விவரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளது.
அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும் ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஒரு தனி முதலாளி அமைப்பாகும்...
தேவி சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது"...