Latest News :

சென்னையின் பரபரப்பான சம்பவங்களை சொல்லும் ’4த் ஃப்ளோர்’! - முதல் பார்வை ஏற்படுத்திய பரபரப்பு!
Sunday April-13 2025

மனோ கிரியேஷன்ஸ் (MANO CREATION) சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படம் ‘4த் ஃப்ளோர்’. தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை  சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். 

 

ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான களத்தில் அதிரடியாக வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

 

இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்,  தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

இப்படத்திற்கு ’போடா போடி’ படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார். சாமி 2, பென்குயின், படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். 

 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related News

10420

ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது! - நானி உறுதி
Saturday April-26 2025

நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது...

”சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள்” - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
Saturday April-26 2025

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய 'மீரா' படத்தின்  கதாசிரியரும் 'அழியாத கோலங்கள் 2' படத்தின் இயக்குநருமான எம் ...

“திரை உலகின் தேவசேனா தேவயானி” - ’நிழற்குடை’ பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்
Friday April-25 2025

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்...

Recent Gallery