‘லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் 15 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியான ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக HK15 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு இரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். மதன்.ஜி படத்தொகுப்பு செய்ய, பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முக்கியமானதாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் பணியினை நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு மேற்கொண்டுள்ளார்...
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'...
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே...