Latest News :

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘அம் ஆ’ தமிழில் நாளை வெளியாகிறது!
Thursday April-17 2025

காபி புரொடக்‌ஷன்ஸ் (Kaapi Productions) தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், அன்பைப் பேசும் படைப்பாக வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற மலையாள திரைப்படம் ’அம் ஆ’. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 60 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நாளை (ஏப்ரல் 18) தமிழில் வெளியாகிறது.

 

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவிக்கும் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

ஒரு தாயின் பாசத்தை பேசும் இப்படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷினி தாயாக, மிக அழுத்தமான பாத்திரத்தில் அற்புதமான  நடிப்பை வழங்கியுள்ளார். இதுவரையிலும் காமெடியில் கலக்கிய இவர், இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார். 

 

ஸ்டீபன் எனும் ரோட் காண்ட்ராக்டர்,  கவந்தா எனும்  ஒரு மலை கிராமத்திற்கு செல்கையில், அங்குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழந்தை வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. மனிதர்களின் அன்பை, அழகாகப் பேசும் ஒரு அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

 

திலீஷ் போத்தன், தேவதர்ஷினி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

 

கவிபிரசாத் கோபிநாத் எழுத்தில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பு செய்ய, பிரசாந்த் மாதவ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாபுராஜ் களம்பூர் மற்றும் சத்தியவேழன் பாடல்கள் எழுத, எஸ்.ஆர்.வாசன் தமிழ் வசனம் எழுதியுள்ளார்.

 

அம்மாவின் பாசத்தை அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்து மலையாளத்தில் பாராட்டுகளையும், வசூலையும் குவித்திருக்கும் ‘அம் ஆ’ மலையாளத்தில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்று படத்தை பார்த்த பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

10435

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery