ஹீரோயினாக நடித்து வருவதோடு, தனது இசை ஆர்வத்தின் பேரில் சில படங்களில் பாடல்களும் பாடி வரும் நடிகை ரம்யா நம்பீசன் ‘கூத்தன்’ படத்திற்காக குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களின் வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக ராஜ்குமார் நடிக்க, ஹீரோயினாக ஸ்ரீஜீதா, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார்.
ஏ.எல்.வெங்கி எழுதி இயக்கும் இப்படத்திற்கு பாலாஜி இசையமைக்கிறார். விவேகாவின் வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி...” என்ற பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இப்பாடல் பதிவு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இது குறித்து கூறிய ரம்யா நம்பீசன், “பாலாஜியின் இசையமைப்பில் நான் முதல் முறையாக பாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டாலும், பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடன் இருந்து உதவி செய்தார். அவரது உதவியுடன் பாடலை நன்றாக பாட முடிந்தது. சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இந்த பாடலை பாடிப்பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று விட்டது” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...