சிம்பு, பிரபு தேவா என இரண்டு காதல் தோல்விகளை கண்ட நடிகை நயந்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காலித்து வந்த நிலையில், ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்ட நயந்தாரா, அவருக்கு சென்னையில் அடுக்கு மாடி வீடு மற்றும் சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்ததோடு, சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பல லட்சங்கள் செலவழித்து அமெரிக்காவில் கொண்டாடினார்.
மேலும், விக்னேஷ் சிவனின் குடும்பத்தாரிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக, அவர்களுக்கும் பல பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களை குஷிப்படுத்திய நயன், தனது காதலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளாராம். அதே சமயம், இன்னும் பல கோடிகளையும் சம்பாதித்துவிட்டு வெளிநாட்டில் செட்டிலாக முடிவு செய்திருப்பவர், அதற்காக விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயந்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சென்னையில் சொகுசு பங்களா ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார்களாம். திருமணத்திற்கு பிறகு இந்த பங்களாவில் வசிக்க திட்டமிட்டிருக்க, நயனின் இத்தகைய நடவடிக்கையால் விக்னேஷ் சிவனின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...