தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவருடைய படங்கள் வெளியாகும் போது, ஊடகங்கள் ஒருவருக்கு ஒருவரை ஒப்பிடுவது வழக்கம். அந்த வகையில், அஜித்தின் விவேகம் படத்தை காட்டிலும், விஜயின் மெர்சல் அனைத்து விதத்திலும் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது.
இந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் முன்னேற அஜித் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே சமயம், இதில் சூர்யா, லாரன்ஸ் போன்றவர்கள் கூட அஜித்தை முந்தியுள்ளார்கள் என்பது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களில் எந்த நடிகர்களின் படங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகமாக பெறுகிறது என்பதை அந்த அந்த தொலைக்காட்சிகள் வெளியிடும். அந்த வகையில், சமீபத்தில் இது குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 9.1 சதவீத டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று ரஜினி முதல் இடத்திலும், 8.7 சதவீதத்துடன் விஜய் இரண்டாம் இடத்திலும், 8.2 மூன்று சதவிதத்துடன் சூர்யா நான்காம் இடத்திலும், 8.0 சதவீதம் பெற்று ராகவா லாரன்ஸ் நான்காம் இடத்திலும் இருக்க, அஜித் 7.2 சதவீதத்துடன் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
டாப் 5 என்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அஜித் கடைசி இடம் பிடித்திருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...