விவேகம் படத்திற்கு பிறகு அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், அவர் நான்காவது முறையாக சிவாவுடன் இணையப் போவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. மேலும், இப்படத்தை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அஜித்தின் அடுத்த படத்தை ‘விக்ரம் வேதா’ வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர் - காயத்ரி இயக்க இருப்பதாகவும், அவர்கள் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சிவா தான் இயக்கப் போகிறார், என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை ’விவேகம்’ படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறதாம்.
‘விவேகம்’ படத்தால் ஏற்பட்ட நஷ்ட்டத்தை ஈடுகட்டும் விதமாக மீண்டும் சத்ய ஜோதி நிறுவனத்திற்கே கால்ஷீட் கொடுத்துள்ள அஜித், அப்படியே இயக்குநர் சிவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
அஜித் அடுத்த படம் குறித்து இதுவரை வெளியான அனைத்து தகவல்களும் வதந்தியே என்று கூறும் வகையில், சத்ய ஜோதி நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...