இசை கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், இந்தி படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அவர் பாலிவுட்டில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.
இதற்கிடையே, ஹாலிவுட் நாடக கலைஞர் ஒருவருடன் ஸ்ருதிக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்த அவர், தாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம், என்று கூறியவர், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதி தீடிரென்று விலகினார்.
இந்த நிலையில், சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது குண்டாகிவிட்டார். உடற் பயிற்சி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தாமல், தற்போது ஹாலிவுட் நாடக கலைஞருடன் சுற்றுவதில் தான் அவர் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
அதேபோல், பட வாய்ப்புகளையும் நிராகரித்து வரும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “ஸ்ருதியா இது!” என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு உடல் பெருத்து காணப்பட்டாராம்.
இதற்கு காரணம், ஸ்ருதி ஹாசன் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, அவரது காதலரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்திருப்பது தான், என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...