தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், விரைவில் தமிழ் சினிமாவின் ஹீரோ பட்டியலில் இடம்பெறப் போவது அனைவரும் அறிந்ததே. அறியாத ஒன்று, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியாவின் காதலை நிராகரித்த ஆரவ், தற்போது ஓவியாவை வலைக்க முயற்சித்து வருகிறாராம்.
ஆனால், இதற்கு பின்னாடி ஆரவி பெரிய சுயநலம் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. அதாவது ஆரவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ள இயக்குநர் சரவணன், ஆரவுக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைத்தால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைக்கும் என்ற கணக்கு போட்டு, ஆரவுக்கு ஓவியாவை ஜோடிக்க முடிவு செய்தாராம். இதை ஆரவுடன் கூறியதுடன், ஓவியாவின் கால்ஷீடை எப்படியாவது வாங்கிவிடும்படியும் ஆரவுக்கு கட்டளையிட்டுள்ளார். கூடவே, இது எல்லாம் உங்களது பியூச்சருக்காக தான், என்று சாவியும் கொடுத்தாராம்.
இதன் காரணமாக, ஓவியாவுடன் மீண்டும் நட்பு பழக ஆரம்பித்துள்ள ஆரவ், தனது படத்தில் ஹீரோயினாக நடிக்கும்படி ஓவியாவிடம் கேட்க, அதற்கு ஓவியாவோ ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பு தரப்பு கோடி எல்லாம் முடியாது, சில லட்சங்கள் மட்டுமே கொடுக்க முடியும், என்று சொல்லிவிட்டதால், தற்போது ஆரவுக்கு புது ஜோடி தேடி வருகிறார்களாம்.
இருந்தாலும், தனது முயற்சியை கைவிடாத ஆரவு, எப்படியாவது ஓவியாவை வலைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
ஒரு நேரத்துல ஓவிய ஆரவை வலைக்கப் பார்க்க, இப்போ ஆரவ் ஓவியாவை வலைக்கப் பார்க்கிறார், என்ன கொடுமை மக்களே இது!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...