விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் அடித்த திடீர் பல்டியால், அவருக்கு விஜய் தம்பியாகிவிட்டார்.
மெர்சல் படத்தில் பேசப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி தொடர்பான வசனங்களுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், விஜய் குறித்து மீடியாக்களிடம் தாறுமாறாக பேசியதோடு, மிரட்டலும் விடுத்தார். இருப்பினும், அவரது எதிர்ப்பு மெர்சல் படத்திற்கு ஆதரவாக அமைந்து படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அமோக வசூலையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தம்பி விஜய்க்கு எதிராக நான் கருத்து கூறவில்லை, என்று தமிழிசை அப்படியே அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம். தம்பி விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை, என்று தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜனின் இந்த அந்தர் பல்டி அரசியல் பா.ஜ.க தொண்டர்களை மட்டும் இன்றி, விஜய் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...