விவேகம் படத்துடன் மெர்சல் படத்தை ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்ட விஜய் ரசிகர்கள் தற்போது அவமானப்படும் விதத்தில், அஜித் ரசிகர்கள் மெர்சல் படத்தை கிண்டல் செய்வதற்கான காரணம் ஒன்று கிடைத்துவிட்டது. சும்மாவே சுரண்டும் அஜித் ரசிகர்கள், அல்வா கிடைத்தால் சும்மா விட்டுடுவார்களா?
மெர்சல் படத்திற்கு அளிக்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும், என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை, கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மெர்சல் படம் குறித்து கருத்து கூறிய நீதிபதிகள், ‘மெர்சல்’ நல்ல படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. எனினும் இதுபோன்ற விமர்சங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது ஒரு திரைப்படத்தை எதிர்த்து வழக்கு போடுவது சரியா? திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள், என்று கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ நல்ல படம் இல்லை, என்று நீதிபதிகளே கூறியதை குறிப்பிட்டு மீம்ஸ்கள் கிரியேட் பண்ணி சமூக வலைதளங்களில் வெளியிடும் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களையும் விஜையும் ஓட்டு...ஓட்டு என்று ஓட்டி வருகிறார்கள்.
அஜித் ரசிகர்களின் இத்தகைய கிண்டலால் விஜய் ரசிகர்கல் பதிலளிக்க முடியாமல் அவமானப்பட்டு வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...