நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பெப்ஸி உமா தான். இவரைப் போல ஒரு தொகுப்பாளினியை நாம் பார்த்திருக்கவும் முடியாது, நிகழ்ச்சி தொகுப்பில் இவரைப் போல யாரும் உற்சத்தை தொட்டிருக்கவும் முடியாது. அந்த அளவுக்கு மீடியா உலகில் பேரோடும், புகழோடும் வலம் வந்தார்.
அதுமட்டும் அல்ல நடிகைகளுக்கு கோயில் கட்டியது கேள்வி பட்டிருக்கிறோம். பெப்ஸி உமாவுக்கு பல ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆந்திராவில் உள்ள குமளி என்ற இடத்தில் தற்போது இவருக்கு கட்டிய கோயில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உடையில் வந்த பிரச்சினை காரணமாக சச்சினுடன் இணைந்து பெப்ஸி விளம்பரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும், மணிரத்னம் மற்றும் பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காயின் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கூட நிராகரித்தாராம்.
அந்த அளவுக்கு புகழின் உற்சத்தில் இருந்த இவர், திடீரென்று மீடியா உலகைவிட்டு மறைந்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று பழைய பேட்டி ஒன்றில், “அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியா உலகை விட்டு விலகினேன்.” என்று பெப்ஸி உமா கூறியுள்ளார்.
தூர்தர்ஷனில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய பெப்ஸி உமா, அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியதோடு, அதே தொலைக்காட்சியில் சொந்தமாக சில நிகழ்ச்சிகளையும் தயாரித்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...