‘மெர்சல்’ படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். மலையாள நடிகையான இவருக்கு மெர்சல் படத்தில் ஜூலி என்ற பெண் மேக் உமனாக இருந்தார். தற்போது நித்யா மேனன் நடித்து வரும் பிராணா என்ற மலையாள படத்திற்கும் ஜூலி தான் நித்யா மேனனுக்கு மேக்கப் உமனாக பயணியாற்றுகிறார்.
இந்த நிலையில், ஜூலி எர்ணாகுளம் ஐ.ஜி-யிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”நான் ‘பிராணா’ என்ற படத்தில் நித்யா மேனனுக்கு மேக்கப் உமனாக இருந்து வருகிறேன். கொச்சி அருகே உள்ள சலீம் வில்லாவில் தங்கியிருந்தேன். கடந்த 15 ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து என் அறைக்கு திரும்பிய போது என் அறை திறந்து கிடந்தது. அறையில் இருந்த விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக வில்லா உரிமையாளரிடம் புகார் அளித்தேன். சிறிது நேரத்தில் படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பாதுஷா உள்பட சிலர், அறைக்குள் வந்து என்னை கற்பழிக்க முயற்சித்தனர். நான் கூச்சல் போட்டதால் ஓடிவிட்டனர். பின்னர் மேலும் சிலர் வந்து என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி எர்ணாகுளத்தில் கொண்டு விட்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஜூலியின் இந்த புகாரை மறுத்துள்ள படக்குழுவினர், அவர் மது அருந்திவிட்டு ரககளை செய்ததால் தான், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அனுப்பினோம், என்று விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...