டிவிட்டரில் அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், தற்போது நேரடியாக களத்திலும் இறங்கி செயல்பட தொடங்கிய நிலையில், தமிழ் சினிமாவின் சமீபத்திய வரவான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்று புது பரபரப்பை உருவாக்கியுள்ளார்.
தஞ்சையை சேர்ந்த பப்ளிக் ஸ்டார், அங்கு முக்கியமான நபர் ஆவார். அதுமட்டும் இன்றி, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் துரை சுதாகர், அதை வெளிக்காட்டிக் கொள்ளவதில்லை.
இதற்கிடையே, கோடம்பாக்கத்தில் ‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளவர், ‘களியாட்டம்’, ‘நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி’ உள்ளிட்ட சுமார் 5 படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார். தற்போது வாய்ப்புகள் பல வந்தாலும், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் கதை மற்றும் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்.
இவர் கோடம்பாக்கத்திற்கு எண்ட்ரியானவுடன் வந்த முதல் தீபாவளி பண்டிகையான கடந்த 14 ஆம் தேதி, சினிமா கலைஞர்களும், தொழிலாளர்களும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு பப்ளிக் ஸ்டார் பல திரை கலைஞர்களுக்கு, பல உதவிகளை செய்து வருகிறார்.
தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை வைத்து மற்றவர்கள் கேலி பேசுகிறார்களோ, அல்லது நிஜமாகவே பப்ளிக் ஸ்டாராக ஏற்றுக்கொண்டார்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், நிஜத்தில் நான் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதற்கான அனைத்து விஷயங்களையும் செய்துகொண்டு தான் இருக்கிறேன், இருப்பேன்., என்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர், சினிமாவிலும் விரைவில் பப்ளிக் ஸ்டாராக மக்களிடம் பிரபலமாகும் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் பப்ளிக் ஸ்டார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம், நற்பணி இயக்க வளர்ச்சி, சென்னை நிகழ்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் பப்ளிக் ஸ்டார் பங்கேற்றதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பப்ளிக் ஸ்டார் பங்கேற்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, தற்போது கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளிலும் பப்ளிக் ஸ்டார் பங்கேற்றிருப்பது சினிமா மட்டும் அல்ல அரசியல் ஏரியாவிலும் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...