பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சந்தோஷ். இவர் ஹீரோவாக நடித்த ‘தாயம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கண்ணன் ரங்கசாமி.
29 வயதாகும் கண்ணன் ரங்கசாமிக்கு திருமணமாகவில்லை. இளம் வயதிலேயே திரைப்பட இயக்குநரான கண்ணன் ரங்கசாமிக்கு கடந்த மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 15 நாட்களாக கோமாவில் இருந்துள்ளார். பிறகு நினைவு திரும்பி 40 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இளம் வயதில் இயக்குநர் கண்ணன் திடீரென்று மரணமடைந்திருப்பது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...