Latest News :

போலீஸ் சோதனையில் சிக்கிய அமலா பால் - சிறை தண்டனைக்கு வாய்ப்பு!
Sunday October-29 2017

இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இதையடுத்து மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர், முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக, கவர்ச்சியில் தாரளம் காட்டி வருகிறார்.

 

‘திருட்டுப்பயலே 2’ படத்தில் அமலா பாலின் கவர்ச்சி காட்சிகளும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும், என்றும் கூறப்படுகிறது.

 

புதுச்சேரியில் உள்ள போலி முகவரி ஒன்றினை கொடுத்து ரூ.1.12 கோடி விலையுள்ள பென்ஸ் கார் ஒன்றை அமலா பால் சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த காரை கேரளாவில் அவர் பயன்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, புதுச்சேரி பதிவு கொண்ட வாகனங்களை மடக்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அமலா பாலின் காரும் அதில் சிக்கியுள்ளது. 

 

கேரளா அரசை பொருத்தவரை, பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஒருவருடத்திற்குள்ளாக கேரள மாநில பதிவு எண்ணாக மாற்றிவிட வேண்டும். அமலா பால் இதை செய்யவில்லை. மேலும், வரி ஏய்ப்பில் ரூ.20 லட்சம் வரை அவர் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

எனவே அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம், என்று கூறப்படுகிறது.

Related News

1144

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery