கடந்த 2016 ஆம் ஆண்டு ராடம் பிலிம் பெஸ்டிவெல் குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அசரீரி’ குறும்படத்தை இயக்கிய ஜி.கே, தனது இரண்டாவது படைப்பாக ‘காதலின் தீபம் ஒன்று’என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
காதலில் தோற்ற இளைஞர் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புருவது போலவும், இதனை நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது போலவும், கதைக்களம் அமைப்பது வழக்கம். ஆனால், நிஜத்தில் அப்படி நடப்பதில்லை என சொல்லும் படமே இந்த ‘காதலின் தீபன் ஒன்று’.
இந்தியாவைச் சேர்ந்த ஜப்பான் தொழிலதிபரான சுரேஷ் நல்லுசாமி என்பவர் இந்த குறும்படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, படத்தை தயாரித்தும் உள்ளார். ஜனனி ரத்தினம், தீபா நடராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஆண்டன் ஜெப்ரின் இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பதிவு இப்படத்தின் பாடல்களை நாச்சியம்மை விஜய் எழுதியுள்ளார். ராகுல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த குறும்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் திரையிட சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வி.இசட்.துரை கலந்துக்கொண்டு குறும்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.
இப்படத்தின் ஹீரோ சுரேஷ் நல்லுசாமிக்கு இது முதல் அனுபவம் என்றாலும், திரையில் அவரது நடிப்பை பார்க்கும் போது அவர் பல படங்களில் நடித்தவரைப் போல நடிப்பில் அசத்தியிருக்கிறார், என்று பாராட்டும் இயக்குநர் ஜி.கே, அதர்வா, ஸ்ரீதிவ்யா, நரேன் ஆகியோர் நடிப்பில் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...