வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று முறைய அஜித்தை வைத்து இயக்கிய சிவா, ஒரு முறை கூட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அஜித் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு, விவேகம் படத்தை அலங்கோளமாக்கிய சிவா மீது தல ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படமும் சிவாவுடன் தான், என்ற தகவல் அஜித் ரசிகர்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது.
இருப்பினும், மனதை கள்ளாக்கிக்கொண்ட ரசிகர்கள், சிவாவுடன் தல எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கட்டும், ஆனால் இடைவெளிவிட்டு நடித்தால் நல்லது, என்று தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் இந்த எண்ணத்தை அஜித் புரிந்துக்கொள்வாரோ, மாட்டோரோ என்று நினைத்த ரசிகர்கள், இயக்குநர் சிவாவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்.
அதாவது, அஜித்தின் சால்ட் & பெப்பர் ஹர் ஸ்டைலை மாற்ற வேண்டும். அஜித்துக்கு அது நல்லா இருந்தாலும், தொடர்ந்து பல படங்களில் அதே ஸ்டைலில் தலய பார்க்க முடியவில்லை, என்று கூறியுள்ளார்கள்.
அதேபோல், ஹிரோவை புகழும் வில்லன் கதாபாத்திரம் வேண்டாம், வில்லனுக்கு ஹீரோவுக்கு இணையான கதாபாட்திரத்தை அமையுங்கள், என்று கூறியிருப்பவர்கள், ஆக்ஷன் காட்சிகளுக்கு நடுவே செண்டிமெண்டை வைத்து கொள்ள வேண்டாம், ஆகிய கோரிக்கைகளை ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
அஜித் ரசிகர்களின் இந்த கோரிக்கைகள் இயக்குநர் சிவாவின் காதுக்கு செல்லுமா? அப்படி சென்றாலும் இதற்கு அவர் செவி கொடுப்பாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...